வவுனியா - பம்பைமடுப் பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.
இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவருடன் சென்ற ஏனைய நபர்கள் நீருனுள் இறங்கி அவரை தேடியபோதும் அவரை மீட்கமுடியவில்லை.
சம்பவம் தொடர்பாக கிராம மக்களுக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. எனினும் நீருனுள் மூழ்கியநபரை மாலை வரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரை மீட்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.