கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை நிராகரித்துள்ளார்.


கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த பதவிக்காக லிவேராவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தாம் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் உள்நாட்டில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் லிவேரா தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் லிவேராவின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிவேரா தனது பதவிக் காலத்தில் 22206 குற்றவியல் வழக்கு விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறான ஓர் பதவியை வழங்கியமைக்காக நன்றி பாராட்டுவதாகவும், எனினும் தாம் இலங்கையிலேயே இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் லிவேரா கூறியதாக சட்டத்தரணி ஜயரட்ன தெரிவித்துள்ளார்
புதியது பழையவை