கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சில அரச திணைக்களங்கள் பொறுப்பற்றவகையில் செயற்பட்டு வருகின்றன


மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்த அரசும், சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் எடுத்துவருகின்றனர்.

இதனடிப்படையில் அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும், அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை சுழற்சி முறையில் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுச் செயலாளரின் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை குறிப்பிடுகின்றது.

இச்சுற்றறிக்கையினை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரச திணைக்களங்கள் பின்பற்றாமல் சகல உத்தியோகத்தர்களையும் அனைத்துத் தினங்களிலும் கடமையில் ஈடுபடுத்துவதுடன், அரச சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலும், இம்மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சில அரச திணைக்களங்கள் பொறுப்பற்றவகையில் செயற்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

பொது மக்களின் சேவைகள் வழங்குவதில் தடங்கல் ஏற்படாமல் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்களை ஈடுபடுத்துவதுடன் வீடுகளில் இருந்து இணையவளியூடாக கடமைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

கொவிட்-19 இன் மூன்றாவது அலை தாக்கம் வீரியம் கூடியதும், தீவிரமாக பரவக் கூடியது எனவும் சுகாதாரத் தறையினரால் தெரிவிக்கும் நிலையில், அணைத்து ஊழியர்களையும் எல்லாநாட்களிலும் வரவழைத்து கடமையில் ஈடுபடுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய திணைக்களத் தலைவர்களே பொறுப்பேற்கவேண்டுமென உத்தியோகத்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதியது பழையவை