சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 63 சாராய போத்தல்களுடன் ஒருவரை சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் H.G.N.D ஜெயவீர தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்..
பயணத் தடை அமுலில் உள்ளபோது மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளார்கள் கந்தரோடை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.