தமிழ்தேசிய கூட்டமைப்பை பற்றியோ அதில்உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகவோ அரசுடன் இணைந்து செயல்படும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் விமர்சிப்பதற்கு எந்த அருகதைகளும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுகட்சி மத்தியகுழு உறுப்பினருமான கௌரவ கலையரசன் தமிழ்மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேசுவதில்லை என ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனையின் கல்முனை பிராந்திய செயல்பாட்டாளர் அகமட்புர்கான் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது அதற்கு பதில் கூறுகையில்.
தமிழ்தேசியகூட்டமைப்பு என்பது ஏனைய அரசியல் கட்சிகளைப்போன்று ஆட்சியமைக்கும் அரசாங்கங்களுக்கெல்லாம் வால் பிடிக்கும் கட்சியில்லை கொள்கைரீதியாக தமிழ்மக்களுடைய உரிமைகள் தொடர்பாகவே அரசுடன் பேசி தமது நோக்கை அடைவதற்காக உழைத்துவரும் ஒருகட்சியாகும்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2020, ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அரசுடன் இணைந்து செயல்பட்ட ஒருவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவார் என்ற அதி நம்பிக்கையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பெருவாரியான தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தமைநால் அம்பாறையில் தமிழ் பிரதிநித்துவம் ஆளும் தரப்பிலோ எதிர்தரப்பிலோ இல்லாமல் போனது.
அரசனை நம்பி புரிசனை கைவிட்ட்நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அநாதரவாக இருப்பதை கருத்தில் கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமை தமது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கினர்.
கடந்த 2004,ம் ஆண்டு இன்றுவரை தமிழ்தேசியத்திற்காக உயிரைகொடுத்து தமிழ்தேசிய அரசியலை அம்பாறை மண்ணில் கால் ஊன்ற உழைத்த வருவரே தவராசா கலையரன் ஆவார் கடந்த இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தோளோடு தோள்நின்று பணிபுருந்தவர் மட்டுமன்றி பல தேர்தல்களில் வேட்பாளர்களாக வருவதற்கு பலர் முன்வராமல் அச்சத்தால் இருந்த வேளைகளிலும் துணிந்து முன்வந்து தமிழ்தேசிய அரசியலுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தரே கலையரசன்.
அவ்வாறான ஒருவர் கடந்த 2006,ல் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராகவும் 2012, கிழக்குமாகாணசபை உறுப் பினராகவும் 2015ல் பொதுத்தேர்தலிலும்,2020, பொதுத்தேர்தலிலும் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு கணிசமான வாக்குகளை தமிழ்தேசியகூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுத்த ஒரு தமிழ்தேசிய கொள்கைவாதியாக நாம் இனம் கண்டதாலேயே தேசியப்பட்டியல் த. கலையரசனுக்கு வழங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்தேசிய அரசியலின் கடந்தகால, நிகழ்கால,எதிர்கால வரலாற்றை கருத்தில் கொண்டே அவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் தேசியபட்டியல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைவருக்கும் இந்த வரலாறு தெரியும் ஆனால் சிங்கள பேரினவாத கட்சியை்சேர்ந்த ஒருவர் பொறுப்பு வாய்ந்த ஒரு வடகிழக்கு மக்களின் உரிமைக்கான அரசியல் செயல்பாடுகளைவலியுறுத்தி இன்று சர்வதேசம் மதிக்கத்தக்க தலைவர் இரா.சம்மந்தன்ஜயாவை தலைமையாக கொண்டு அரசியல் செய்யும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கிய தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.
நாம் வேறு ஒரு கட்சியில் வெற்றிபெற்ற வருவரையோ, அல்லது வேறு கட்சியூடாக தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவரையோ எந்த விதத்திலும் பிளையாக விமர்சிக்கமாட்டோம்.
முதலில் அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருகட்சி உறுப்பினரை இன்னொரு கட்சி உறுப்பினர் பிழையாக விமர்சிப்பது என்பது எந்தக்கட்சியாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று எனவும் மேலும் கூறினார்.