தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் பொலிசாரினால் கைது


மட்டக்களப்பு செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளர் , தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் .

நேற்று மாலை இரவு 7.30 மணியளவில் செங்கலடியில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகள் டக் (tag ) செய்யப்பட்டமை , அனுப்பப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் படங்கள் காணொளிகள் வெளிநாடுகளிலிருந்து இவரது முகநூலுக்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் .
புதியது பழையவை