மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி சுகாதார வைத்திய பிரிவில் அடையாளம் கானப்பட்ட அதிகமானோர் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள்
போரதீவுப்பற்றில் நேற்று 29-05-2021ம் திகதி 90 பேருக்கு மேற்கொள்ள
ப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 16 தொற்றாளர்கள் அடையாளம் கானப்பட்டனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையில் சுகாதார பிரிவினரால் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் நேற்று போரதீவுப்பற்று சுகாதார பிரிவுக்குட்பட்ட திக்கோடை,பெரியபோரதீவு,பட்டாபுரம் .பழுகாமம் 40ம் கிராமம் வம்மியடிஊற்று இளைஞர் விவசாயத்திட்டம் கோவில்போரதீவு காக்காச்சிவட்டை ஆகிய கிராமங்களில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பகுதிகளில் சுமார் 90பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 16பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அதில் 3 வதுப்பிள்ளைக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.