வாழைச்சேனை காவல் நிலையத்தில் கொரோனா!


மட்டக்களப்பு வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் இரு காவற்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக இன்று 30-05-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் இன்று 20 காவற்துறையினருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் இரு காவற்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடயவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
புதியது பழையவை