நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்று 17-05-2021ம் திகதி #Sஅதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இன்று முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் பணயக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
நாடு முழுவதுமான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்தாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்.
இக்காலப்பகுதியில் தேசிய அடையயாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு பொது மக்களுக்கு அனுமதி உண்டு.
என்றாலும் பணிக்கு செல்பவர்கள் தமது உறுதிப்படுத்தல்களை மேற்கொண்டுவிட்டு செல்வதில் எவ்வித தடைகளும் இல்லை. இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் எந்தவித தடையுமின்றி முன்னெடுப்பதற்கு முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வெளியில் செல்லும் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சொந்த வாகனங்களில் தனியாக செல்லும் பொது முகக்கவசங்களை அணிவது கட்டாயமில்லை என்ற போதிலும் வெளியில் கட்டாயம் அணிய வேண்டும் அவர் கூறியுள்ளார்.