ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
சூடுபத்தினசேனையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் நூற்றி ஐம்பத்தாறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதில் இரண்டு வெளிநாட்டவர்கள், பௌத்த மதத்தவர் ஒருவர், இந்து மதத்தவர் மூன்று, கிறிஸ்தவ மதத்தவர் ஆறு பேரின் உடல்கள் அடங்களாக நூற்றி நாற்பத்தி நான்கு இஸ்லாம் மதத்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மரணிப்பவர்களின் தொகை அதிகரித்து காணப்படுகின்றது. புதுவருட கொத்தனிக்கு பிறகு தற்போது நோன்பு பெருநாளுக்கு பின்னரான வைரஸ் தாக்கமும் உருவாகலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் மாத்திரம் அதிக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஓட்டமாவடி பிரதேசத்தில் எவரும் உயிரிழக்காத வகையில் விழிப்புடன் செயற்பட வேண்டும். எனவே முன்னர் அரம்பிக்கப்பட்ட கிராம மட்ட குழுவினரை மீண்டும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியில் இருந்து நோன்பு காலத்தில் யாரும் வருகை தந்திருந்தால் அவர்களை எமக்கு தெரியப்படுத்தி அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் பட்சத்திலும் எமது பகுதியினை காப்பாற்ற முடியும். எனவே எமது பிரதேசத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்காத வகையில் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றேன் என்றார்.
