விபத்தில் கிராமசேவகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்


 
கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கிராமசேவகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முழங்காவில் கிராம சேவையாளரான பி.நகுலேஸ்வரன் என்ற  குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் எதனுடன் மோதி விபத்துக்குள்ளானது என்பது தொடர்பான விசாரணைகளை ஜெயபுரம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை