எம்.வி. எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் முழுவதும் தீ பற்றியுள்ளதாகவும், தொடர்ந்தும் அணைப்பது கடினமான செயல்பாடு என பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஐசிஜி வைபாவ், டக் வோடர் லில்லி ஆகிய இரு கப்பல்கள் மற்றும் ஐசிஜி டொர்னியர் என்ற விமானம் இவ்வாறு எம்.வி. எக்ஸ்- பிரஸ் பேர்ல் என்ற கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
மேலும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் உள்ளிட்ட இலங்கை கடற்படையின் கப்பல்களும் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. என்னும் கப்பலின் அனைத்துப் பகுதிகளிலும் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.