ஊடகவியலாளர்களை பாராட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ


நாடு எதிர்கொண்டுள்ள  கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில்   உயிராபத்தை பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் ஊடகவியலாளர்களின் பணி மிகவும்  பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

ஊடக சுதந்திரதினத்தை முன்னிட்டுள்ள பிரதமர்  விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு உலகும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மக்கள் நன்மைக்கான தகவல் எனும் தொனிப்பொருளில்  இம்முறை    ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த  சிறப்பான பங்களிப்புக்கு அரசாங்கம்   எந்தவொரு  சந்தர்ப்பத்திலும் தமது பாராட்டுதல்களை தெரிவிப்பதாகவும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

தகவல் தொழினுட்ப துறை வேகமாக வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய காலகட்டத்தில்   தகவல் அறியும் உரிமையினை  உறுதிப்படுத்துவதற்காக  இரவு பகல் பாராது   பணியாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை