ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்


கொவிட்-19 தொற்றுநோய் தினசரி பரவாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊடகவியலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடங்கப்பட்டுள்ளது.

வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வேண்டுகோளின் பேரில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை