போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை 04ம் வட்டாரத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வியாழக்கிழமை (13.05.2021) இரவு பெண் ஒருவர் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஹெரோயின் 2760 மில்லி கிராம் மற்றும் ஐஸ் போதைப் பொருள் 1000 மில்லி கிராம் என்பவற்றுடன் 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஆகியோர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை