கோவிட் 19 பற்றி மருத்துவர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கையானது இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சராக பதவி வகிக்கும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் சுகாதார அமைச்சு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அவர், சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.