மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் நேற்று இரவு 27-05-2021ம் திகதி உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழப்பு 26 ஆக அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பெரியபோரதீவு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்