பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று விசேட கலந்துரையாடல்




பயணக்கட்டுப்பாடு  தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று 28-05-2021ம் திகதி விசேட கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜப்கஷ மற்றும்  கொவிட் 19 தடுப்பு   செயலணி ஆகியோருக்கிடையில்  இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பயணக்கட்டுப்பாடு  கடந்த 25 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

 இந்த நிலையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில்  திட்டமிடப்பட்டுள்ள   பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தும் விடயத்தில் அரசாங்கம்  அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும் ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம்  7 ஆம் திகதி வரைநீடிக்கப்பட்டுள்ள நிலையில்  கடந்த  25  ஆம் திகதி  தளர்த்தப்பட்டதுடன் . எதிர்வரும்  31  மற்றும் ஜூன் மாதம்  4 ஆம் திகதிகளிலும்  பயணத்தடையினை தற்காலிகமாக தளர்த்துவதற்கு  முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை