ஊடகவியலாளர்களினால் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.






தற்போது நடைமுறையில் இருக்கும் பயணத்தடை விதிமுறைகளினால் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் யாசகம் பெற்று வாழும் மக்கள் உணவு மற்றும் குடிநீரின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இன்று வவுனியா ஊடகவியலாளர்களினால் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ச்சியான முடக்க நிலையில் இம் மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் தேவைப்படுகின்றன.

சமுக சேவையாளர்கள் முன்வந்து சமைத்த உணவுப் பொதிகள் வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்
புதியது பழையவை