பாம்பு தீண்டிய சிறுவன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி


திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பகொட்ட பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, புடையன் பாம்பு தீண்டிய சம்பவமொன்று, இன்று 16-05-2021ம் திகதி காலை பதிவாகியுள்ளது.

சிறுவன் மயக்கமுற்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

திருகோணமலை, கம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த தேவிந்த பிரசாந் (10 வயது) எனும் சிறுவனையே இவ்வாறு பாம்பு தீண்டியுள்ளது.

சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை