நாட்டில் Sputnik V கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்


நாட்டில் Sputnik V கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டமாக கொழும்பில் உள்ள கொத்தடுவ பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு Sputnik V கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பகுதியைச் சேர்ந்த 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இவ்வாறு முதல்கட்ட Sputnik V கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்ய தயாரிப்பான Sputnik V கொரோனா தடுப்பூசிகளின் முதலாவது தொகுதி கடந்த 04 ஆம் திகதி அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

இதன்படி, முதல் கட்டமாக 15 ஆயிரம் Sputnik V கொரோனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை