16 தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று 24-06-2021ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது எனச் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேநேரம் சிறிய குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 93 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் கூறினார்.
புதியது பழையவை