மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 211 தொற்றாளர்கள் , மூன்று மரணங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 211பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 03மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர்.
பெரியகல்லாறில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நேற்று 94பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 22 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பெரியகல்லாறு 02ஆம்,03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
புதியது பழையவை