நில அதிர்வுகள் அடிக்கடி உணரப்படும் விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியில் நில அதிர்வு அளவீடுகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
இதற்கு தேவையான உபகரணங்கள் ஜேர்மனியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறித்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 10 நிலஅதிர்வு அளவீடுகள் நிறுவப்படவுள்ளன.
தற்போதைய நிலையில் குறித்த நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்படும் நிலஅதிர்வுகள் தொடர்பில் எந்தத் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் எனினும் மேற்படி அளவீடுகளை நிறுவியதன் பின்னர் அது தொடர்பிலான ஆய்வுகளில் ஈடுபட முடியம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் விக்டேரியா நீர்த்தேக்கப் பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு உணர்ப்பட்டது. தொடர்ச்சியாக இப்பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்லேகல, மஹகந்தராவ, புத்தங்கல மற்றும் ஹக்கமன ஆகிய பிரதேசங்களில் நில அதிர்வு அளவுகள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது