சிங்களத்தை நீக்கியது ஏன்?


யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப் பலகையில் சிங்கள மொழி உள்ளடக்கப்படாமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தின் பிரதான பெயர்ப் பலகையில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே துணைத்தூதரகம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து தற்பொழுது துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகையில் சிங்கள மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 90 விதமான மக்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் சிங்கள மொழியை பெயர்ப்பலகையில் உள்ளடக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை என இந்திய துணைத் தூதரக தகவல்கள் தெரிவித்திருந்தன.
எவ்வாறெனினும், சிங்கள மொழி உள்ளடக்கப்படாமை ஒர் பிரச்சினை எனக் கண்டறிந்து அது திருத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு இந்திய துணைத் தூதரகம் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளது.
தற்பொழுது சிங்கள மொழியையும் உள்ளடக்கிய பெயர்ப் பலகை போடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி, பெயர்பலகைகளில் உள்ளடக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை