சீமெந்து ஏற்றிவந்த லொறி விபத்து


திருகோணமலையில் இருந்து நிந்தவூர் பிரதேசத்துக்கு சீமெந்து ஏற்றிவந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் டயர் வெடித்ததில் விபத்து இடம்பெற்றுள்ளதாகாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் லொறி மோதி பின்னர் வீதியோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை