அமைச்சர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்


மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். 

இன்று 26-06-2021ஆம் திகதி  காலை 10 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற இவர்கள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை