பாலியல் சர்ச்சையில் சிக்கிய செங்கலடி பிரதேச செயலாளர் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கொழும்பு பொலிஸ் தலைமையகம் என்பன தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரை பாதுகாப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் மிக தீவிரமாக செயற்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை விசாரணைக்காக கொழும்பிற்கு இடமாற்றம் செய்வதை குறித்த இராஜாங்க அமைச்சர் தடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் குறித்த இராஜாங்க அமைச்சரின் பிணாமிகளுக்கு அதி கூடுதலான மண் அனுமதிப் பத்திரம், மற்றும் ஒப்பந்த வேலைகளை குறித்த பிரதேச செயலாளர் வழங்கி வருவதால், பிரதேச செயலாளர் எத்தனை பெண்களுடனும் உள்ளாசமாக இருக்கட்டும் அது அவருடைய சொந்த பிரச்சினை ஆனால் எமக்கு எமது வியாபாரம் தான் முக்கியம் என செங்கலடி பிரதேச செயலாளரை காப்பாற்றும் முயற்சியில் இராஜாங்க அமைச்சர் நேரடியாக இறங்கி உள்ளார்.
இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களுக்காக அரசுடன் இணைந்ததாக கூறும் இராஜாங்க அமைச்சர் பாலியல் இச்சைக்கு பெண்களை அதுவும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண்களை உள்ளாக்கி பாலியல் இலஞ்சம் பெற்ற அரச உயர் அதிகாரியை காப்பாற்ற முற்படுவது எந்த வகையான மக்கள் சேவை என சிந்திக்க தோன்றுகிறது.