புளியந்தீவு புனித ஜோசப் வாஸ் பக்திச் சபையால் நிவாரணம் வழங்கிவைப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றையடுத்து அரசாங்கம் பயணத்தைடை கட்டுப்பாட்டை விதித்துள்ளது இந்த நிலையில் வறிய மக்களுக்கு புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்கின், புனித ஜோசப் வாஸ் பக்திச் சபையால் இரண்டாம் கட்டமாக 170 குடும்பங்களுக்கு நிவாரணமாக உலர் உணவு பொருட்களை வழங்கிவைக்கப்பட்டனர்

புனித ஜோசப் வாஸ் பக்திச சபையின் தலைவர் அருட்திரு ஜோச் ஜீவராஜா தலைமையில் சபை உறுப்பினர்கள் இரண்டாம் கட்டமாக பெறுமதியான உலர் உணவுகளை நிவாரணமாக வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்
இதில் வாகரை, வெருகல், மாங்கேணி, வாழைச்சேனை, செங்கலடி, மயிலன்பாவெளி, திராய்மடு, தாழங்குடா, ஆயித்தியமலை ,நாவற்குடா போன்ற கிராமங்களில் பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்து கஷ்டப்படும் 170 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களின் வீடுகளுக்கு சென்று நிவாரண பொதியினை வழங்கினர்.

அதேவேளை முதலாம் கட்டநிவாரணம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராமங்களில் வாழ்வாதாரத்தினை இழந்து கஷ்டப்படும் 100 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கான நிவாரணங்களை கடந்த மாதம் 26, 27 திகதிகளில் வழங்கிவைத்துள்ளதாக புனித ஜோசப் வாஸ் பக்திச சபையினர் தெரிவித்தனர்.
புதியது பழையவை