இன்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும்



நாட்டின் இன்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூரியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா, மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில், மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும்காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்ப்படுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
புதியது பழையவை