பெரியகல்லாறு அடைக்கலம் சமூக சேவைகள் அமைப்பினால் நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கான நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலும் உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 02ஆம் 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பெரியகல்லாறு அடைக்கலம் சமூக சேவைகள் அமைப்பினால் நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பெரியகல்லாறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 02ஆம் 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அடைக்கலம் சமூக சேவைகள் அமைப்பின் இணைப்பாளர் ஆ.அகிலனின் வழிகாட்டலின் கீழ் 3000ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,கிராம சேவையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கான நிதியுதவிகளை புலம்பெயர்ந்துள்ள உறவுகளும் நலன்விரும்பிகளும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை