வீதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவர் இலங்கையர் – சீனப்பிரஜை அல்ல


பருத்தித்துறை- மருதங்கேணி  பகுதியில் வீதி அமைக்கும் பணியில்  சீன பிரஜை ஒருவர்  ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் குறித்த நபர் இலங்கை பிரஜை  ஒருவர் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் உறுதி செய்துள்ளார்.

வடக்கில் சீனப் பிரஜைகள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டிருந்தார்.
புதியது பழையவை