இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் இன்று 05-06-2021ஆம் திகதி மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இன்று சனிக்கிழமை இலங்கையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 201,534 ஆகும்.

இவர்களில் 166,132 தொற்றாளர்கள் இதுவரையில் முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 31,466 பேர் வைத்தியசாலைகளிலும் இடை நிலை பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 1,377 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,656 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை