மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்றுமாலை மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் , இதன்போது ஒன்பது(09) வறல்களும், ஒரு சிலிண்டர், இரண்டு கேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை சிக்கியுள்ளன.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை குறித்த உற்பத்தி நிலையமானது ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் படையினர் தோணியில் பயணித்தே அந்த நிலையத்தினை முற்றிகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.