தனது மனைவியை கடத்தியதாக பொலிஸ் அதிகாரி முறைப்பாடு


தனது மனைவியை கடத்தியதாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

சிஐடியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, தனது அதிகாரப்பூர்வ வாகனத்தில் கண்டி வீதியில் இரவு 9.45 மணியளவில் தனது மனைவியுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சென்று கொண்டிருந்தார் எனவும்,

அவர்களை துரத்திச் சென்ற போது, கண்டி வீதியில் உள்ள தலுகம களனீய பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
புதியது பழையவை