மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடமாடமுடியாத குடும்பஸ்த்தர் ஒருவரை பராமரிக்கும் வகையிலான தனி அறையொன்று அமைக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையிடம் குடும்ப உறவினர்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் ஜேர்மனியில் இங்கும் நம்பிக்கைஒளி அமைப்பின் உதவியுடன் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை இந்த தங்குமிடத்தினை அமைத்துள்ளது.
இதனை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம்,கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.