முச்சக்கரவண்டி சாரதிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கவலை


கல்முனையில் முச்சக்கரவண்டிசாரதிகள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய கொரோனா தொற்று அச்சம் காரணமாக பயணிகள் முச்சக்கரவண்டியில் பயணம் செய்ய முன்வருவதில்லையென்றும் இருவருக்கு மேல் முச்சக்கரவண்டியில் ஏற்றக்கூடாது என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தவிர பெற்றோல் விலை அதிகரிக்கபட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி இவ் விடயத்தில் கவனம் செலுத்துமாறு முச்சக்கரவண்டி சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை தமக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லையென்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை