குருணாகலை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்


குருணாகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 விளக்கமறியல் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைதிகள் இன்று (27)குருணாகலை நீதவான் நீதிமன்ற சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று பேரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை