அண்மையில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன.
ஒரு பொது மகனை இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் எவ்வாறு தலையில் சுட்டுப் படுகொலை செய்ய முடியும் எனவும், இராஜாங்க அமைச்சரின் வீட்டில் இருக்கும் சிசிரீவி கமரா தொடர்பாகவும் பல கேள்விகள் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இவை தொடர்பான ஒரு தெளிவுப்படுத்தலை எமக்கு வழங்குகினார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.