தம்புல்லையில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் 12,000 கிலோ கத்தரிக்காய்யை தீவைத்து எரித்துள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்து இல்லாததால் விவசாய அதிகாரிகளின் முன் இவர் தனது தோட்டத்து கத்தரிக்காய்க்கு தீ வைத்துள்ளார்.
ஐந்து ஏக்கர் காணியில் விதைக்கப்பட்ட கத்தரிக்காயில் 14 கிலோ அறுவடை செய்யப்பட்டுள்ளது.
எனினும் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காததால் இவற்றில் 12 கிலோ கூட விற்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
2 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறித்த விவசாயி கூறினார்.