இலங்கையானது சீனாவின் மாகாணம்போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வடகிழக்கில் உள்ள மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டினையும் சீனா மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ் மாநகரசபை ஊழியர்கள் சீருடை தரித்ததற்காக மாநகர முதல்வரை கைதுசெய்த இந்த அரசாங்கம் சீனர்கள் இராணுவ சீருடையை ஒத்த சீருடை அணிந்ததற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
இந்தியாவினை சுற்றி சீனா வகுத்துவரும் திட்டத்திற்கு அமைவாகவே இலங்கையிலும் சீனா காலூன்றிவருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.