தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேருக்கு நாளை பொதுமன்னிப்பு?


தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேருக்கு நாளை(24) பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த ஏழு பேரும், இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் நடைமுறையின் கீழ் குறித்த 7 பேரும் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை