செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியளாலருக்கு அச்சுறுத்தல்!


மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு இன்றி காணப்படும் நண்டு, அட்டை, மீன் உள்ளடங்களாக பல பண்ணைகள் காணப்படுகின்றது.

குறித்த  பண்ணைகள் தொடர்பாக கிராம மக்கள் தெரிவித்த குற்றச்சாட்டை நேரடியாக சென்று பார்வையிட்டு  செய்தி சேகரிக்கச்  சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியளர் ஒருவரை  நேற்று சனிக்கிழமை 19-06-2021ஆம் திகதி மதியம் அச்சுறுத்தும் விதமாக செயற்பட்ட இலுப்பைக் கடவை மீனவ சங்கத்தலைவரும்   உரிய பாதுகாப்பு இன்றி காணப்பட் பண்ணையின் உரிமையாளர் ஒருவர் மீதும் இலுப்பை கடவை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் மற்றும் அவருடைய உறவினர் ஊடகவியலாளரை  அச்சுறுத்தியது மாத்திரம் இன்றி புகைப்பட கருவியில் எடுக்கப்பட்ட ஆதாரங்களையும் அழிக்க வற்புறுத்திய நிலையில் குறித்த பண்ணையால் பாதிக்கப்பட்டு ஆதங்கம் வெளிப்படுத்திய இளைஞர்  மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து மக்களின் எதிர்பை தொடர்ந்து அவ் இடத்தை விட்டு சென்றதை தொடர்ந்து தாக்கப்பட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் மற்றும் ஊடகவியளாரின் பணிக்கு இடையூரை ஏற்படுத்தியமை   தொடர்பாகவும் இலுப்பைக்கடவை காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஆழமான குழிகள் தோண்டப்பட்டு பண்ணைகள் அமைக்கப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லாத நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கையிட சென்ற நிலையிலேயே அவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணை ஒன்றின் உரிமையாளரும் இலுப்பைகடவை மீனவ சங்க தலைவருமான குறித்த நபர் ஊடகவியலாளருக்கு  அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

புதியது பழையவை