ஆற்றில் நேற்று மாலை குளித்துக்கொண்டிருந்த எட்டுப் பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஏறாவூரின் கொம்மாதுறைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரும் 15 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் என பொலிஸார் கூறினர்.
இவர்களின் சடலங்கள் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.