யாழ்.மாவட்டத்தின் எம்.பிக்களின் தொகைக்கு ஆப்பு


2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த கம்பஹா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்த 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது மற்றும் அதிகரிக்கப்படுவது தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை