இலங்கையில் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், கோழி இறைச்சியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாது என்று கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர்கள்,
கோழி தீவனங்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் மக்காச் சோளம் 55 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது.
கோழி உற்பத்தியின் 70 சதவீதம் கோழி தீவனத்துக்காகப் பயன்படுகிறது.
மக்காச் சோள இறக்குமதிக்கு தடைவிதித்தமை, கோதுமை விதைகளை இறக்குமதி செய்வதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் போன்ற காரணங்களால் கோழி தீவனத்தின் விலை உயர்ந்துள்ளது.
கட்டுப்பாட்டு விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்வதால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கோழி இறைச்சியின் விற்பனை விலையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோழி இறைச்சி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.