போலியான செய்திகளை பரப்பும் மற்றும் சேறுபூசும் வகையில் செயற்படும் இரண்டாயிரம் இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிகளவிலான இணையத்தளங்கள் உள்நாட்டில் இருந்து இயங்குகின்றமை தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், சமூகத்தில் முக்கியமானவர்கள் ஆகிய தரப்புக்களை இலக்காகக் கொண்டு இந்த இணையதளங்கள் சேறுபூசும் செய்திகளை பரப்பி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இணைய தளங்களை நடத்தும் நபர்கள் பற்றியோ அவற்றுக்கு அனுசரணை வழங்குபவர்கள் தொடர்பாகவோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இவ்வாறான இணையத் தளங்களை முடக்குவதற்காக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.