
வட்டுவவில் உள்ள டெல்துவ கணேவட்ட பண்டைய விகாரையில் வசிக்கும் 26 துறவிகள் மற்றும் மூன்று சாதாரண மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (ஜூன் 28) குறித்த விகாரையில் வசிக்கும் 9 துறவிகள் மீது நடத்தப்பட்ட எழுந்தமாறான விரைவான அண்டிஜன் பரிசோதனையின் போது 5 துறவிகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அதன்படி, அங்கு பணிபுரியும் ஏனைய துறவிகள் உட்பட 83 பேர் நேற்று பிற்பகல் விரைவான அண்டிஜன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், இதன்போது துறவிகள் உட்பட 24 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் விகாரையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு புதிய துறவியின் தந்தை, ஒரு சிறுவர் மற்றும் தம்ம பள்ளி ஆசிரியர் ஆகியோர் அடங்குவதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட துறவிகள் மற்றும் பலர் இராணுவ பாதுகாப்பின் கீழ் நேற்று இரவு களுத்துறையில் உள்ள ஒரு சிறப்பு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.