மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக நேற்று மாலை அவரின் மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.