நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டில்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு சென்றுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில் பல்வேறு பதாகைகள் மற்றும் கோஷங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் எரிபொருள் விலையேற்றப்பட்டதனை கண்டித்து அப்போதைய எதிர்க்கட்சியினரான தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டில்களில் நாடாளுமன்றம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.